பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார்.

Published Date: May 14, 2025

CATEGORY: CONSTITUENCY

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு அமைச்சர் பாராட்டு:

பிளஸ் 2 தேர்வில் அதிகம் மதிப்பெண் பெற்ற மாணவ மாணவிகளை பாராட்டிய அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஊக்குத்தொகை வழங்கினார்.

மதுரை மாநகராட்சி பள்ளிகளில் 2,091 மாணவ மாணவிகள் பிளஸ் 2 தேர்வு எழுதினர். இதில் 1,954 மாணவர்கள் 93.45 சதவீத மதிப்பெண்கள் பெற்று தேர்ச்சி பெற்றனர். பிளஸ் 2 பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற சுந்தர்ராஜபுரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் ஊக்கத்தொகை வழங்கிப் பாராட்டினார். 

இந்நிகழ்ச்சியில் மாநகராட்சி ஆணையர் சித்ரா, மத்திய மண்டல தலைவர் பாண்டிசெல்வி,  துணை மேயர் மிசா பாண்டியன் பலர் கலந்து கொண்டனர்.

Media: Hindu Tamil